Wednesday, November 26, 2014

மனதில் எழுந்த தமிழ் எழுந்த கதை


"அகர முதல எழுத்து எல்லாம்.
ஆதி பகவன் முதற்றே உலகு"

என்னடா இவன் திருக்குறலில் ஆரம்பிக்கிரனே! ஒரு வேள திருகுறள பத்தி சொல்ல
வாரனோ என்று யோச்சிற வேணாம். என்னை பொருத்தவரை மொழியையும் கடவுளையும் முதன்மைப் படுத்தும் இரு வரிக்குறளில் தொடங்கலாம் என்று ஒரு ஆசை. 

நான் படித்ததில் பிடித்த என் தாய் தமிழின் சில துளிகளை என் சக தமிழனுக்கு (தமிழச்சிக்கு) சொல்லாம் என்ற ஒரு ஆசை. என்னை பொறுத்த வரை வாசிப்பவன் அதன் படி வாழா விட்டாலும் அதை எழுதியவன் அதன் படி வாழ வேண்டும். இல்லை என்றால் அவனும் ஓர் ஏமாற்றுக்காரன் தான். உண்மையை சொன்னால் நானும் தான். ஏனென்றால் நான் இங்கு சொல்லும் எத்தனை விடயங்களை கடைப்பிடிக்கின்றேனோ தெரியாது. 

பொதுவாக ஒரு பேச்சு இருக்கு தாய் மொழியை நேசிக்காத எந்த ஒரு தலைமுறையும் தளிர்த்ததாக சரித்திரம் இல்லை. அந்த தலைமுறைல நானும் என் தலைமுறையும் இருந்திற கூடாது என்ற ஒரு உள் உணர்வு. இப்ப எல்லாம் அம்மா என்று சொல்றத விட மம்மி என்று சொன்னாத்தான் மரியாத. அதுலையும் சில சமுகம் எதிர்காலத்தில வெளிநாடு போவம் என்ற நம்பிக்கைலையே பிள்ளைய "why are you crying?" எண்டு தான் தாலாட்டுது. அப்பதான் எனக்கு ஞாபகம் வந்திச்சு ஒரு பட்டி மன்றத்துல வலம்புரி ஜான் சொன்னது. உன்ன உன் பிள்ள மம்மி என்று சொல்லுது ஏன்டா பின்னால அம்மில வச்சி இடிக்க போது என்று புரிந்துகொள். ஆனா அவர் சொன்னதிலும் ஒரு சின்ன சிக்கல் மம்மி சொல்ற பிள்ள மிக்ஸி தானே பாவிக்கிறது. அதுக்காக நான் உங்கள ஆங்கிலமே பேச வேணாம் என்று சொல்லல்ல. பேசுங்க ஆனால் தாய் மொழிய கொன்று பேச வேண்டாம் என்று சொல்றன்.

தமிழ மொத்தமா பாதுகாக்க முடியாட்டிலும் எதோ சமூகத்துல நடக்கிற தமிழ் கொலைகள உங்களோட பகிர்ந்தாலாவது வாசிக்கிறவங்க மாற யோசிக்கலாம் இல்லையா. நான் எழுதும் அனைத்தும் எனது குருக்களான  நான் வாசிக்கும் புத்தகங்கள் , கேட்கும் சொற்போளிவுகள் மற்றும் என்னை இப்படி எழுத தூண்டிய இந்த சமுகத்துக்கு சமர்ப்பணம்.